தொழில்நுட்பம்
ட்விட்டர்

போதிய வரவேற்பு இல்லை - அந்த அம்சத்தை நீக்கும் ட்விட்டர்

Published On 2021-07-15 10:59 GMT   |   Update On 2021-07-15 10:59 GMT
ட்விட்டர் தளத்தில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அம்சம் அடுத்த மாதம் நீக்கப்படுகிறது.


ட்விட்டர் ப்ளீட்ஸ் அம்சம் ஆகஸ்ட் 3, 2021 முதல் பயன்படுத்த முடியாது என ட்விட்டர் தெரிவித்தது. ட்விட்டரில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ப்ளீட்ஸ் ஆப்ஷனை பெரும்பாலான பயனர்கள் பயன்படுத்துவதில்லை.



ப்ளீட்ஸ் அம்சம் மூலம் அதிக பயனர்களை ஈர்க்க ட்விட்டர் திட்டமிட்டு இருந்தது. ப்ளீட்ஸ் என்பது வாட்ஸ்அப் ஸ்டோரி போன்றே செயல்பட்டு வருகிறது. ட்விட்டர் பயனர்கள் தங்களது கருத்துக்களை எளிதில் பதிவு செய்ய வைக்கும் நோக்கில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக ப்ளீட்ஸ் ஆப்ஷன் ஆகஸ்ட் 3, 2021 முதல் செயல்படாது என ட்விட்டர் தெரிவித்து இருக்கிறது. தற்போது இந்த ஆப்ஷன் நீக்கப்பட்டாலும், இதில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் ட்விட்டரின் மற்ற ஆப்ஷன்களில் படிப்படியாக வழங்கப்படும் என தெரிகிறது. 


Tags:    

Similar News