உள்ளூர் செய்திகள்
.

தருமபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு முதல் நாளில் 1,029 பேர் ஆப்சென்ட்

Published On 2022-05-06 10:18 GMT   |   Update On 2022-05-06 10:18 GMT
பிளஸ்-2 தேர்வு முதல் நாளில் தருமபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 029 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தருமபுரி, 

தருமபுரி மாவட்டத்தில்  நேற்று 79 தேர்வு மையங்களில் பிளஸ்-2 தேர்வு நடந்தது. இதில் அரசு, மெட்ரிக் பள்ளியை உள்பட 179 பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 347 பள்ளி மணாவர்கள் மற்றும் 680 தனியார் தேர்வர்கள் என மொத்தம் 21 ஆயிரத்து 27 பேர் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து 10 கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு துவங்கும் முன் தேர்வு மையங்களுக்கு வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர். 

முககவசம் அணிந்தும், சானிடைசர் வழங்கியும் மாணவியர்களை தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டது.மேலும் 66 மாணவர்கள், ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினர். நேற்று துவங்கிய முதல் நாள் தேர்வில் 1,029 பேர் ஆப்சென்ட் ஆகினர். 

அதியமான்கோட்டை அறிஞர் அண்ணா அரசு  மேல் நிலைப்பள்ளியிலும், இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மாவட்ட கலெக்டர் தர்சினி ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சி.இ.ஓ. குணசேகரன் தேர்வை ஆய்வை செய்தார்.
Tags:    

Similar News