செய்திகள்
ஜக்கி வாசுதேவ் தலைமையில் மோட்டார் சைக்கிள் பேரணியை இளவரசர் யதுவீர் தொடங்கி வைத்தார்

தாய் காவிரிக்காக 12 வருட அர்ப்பணிப்பு - ஜக்கி வாசுதேவ் கருத்து

Published On 2019-09-07 03:43 GMT   |   Update On 2019-09-07 03:43 GMT
இது ஒரு நாள் பேரணி அல்ல. தாய் காவிரிக்காக 12 வருட அர்ப்பணிப்பு, காவிரியை மீட்பதை மெய்ப்பித்து காட்டுவோம் என்று ஜக்கி வாசுதேவ் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
சென்னை:

காவிரியை மீட்பதற்காகவும், அதை சார்ந்து இருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ‘ஈஷா’ அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கினார். ‘காவிரி கூக்குரல்’ இயக்கம் காவிரி வடிநில பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக காவிரியை மீட்பதற்காக ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில் நேற்று கர்நாடக மாநிலம் மைசூருவில் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. ஜக்கி வாசுதேவ் பின்னால் ஏராளமானோர் மோட்டார் சைக்கிளில் அணிவகுத்து சென்றனர்.

இதுகுறித்து ஜக்கி வாசுதேவ் தனது டுவிட்டர் பதிவில், மைசூரு பேரணியை மிகவும் சிறப்பம்சம் வாய்ந்ததாக மாற்றிய மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கும், மகாராஜா யதுவீருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு நாள் பேரணி அல்ல. தாய் காவிரிக்காக 12 வருட அர்ப்பணிப்பு. ஏனென்றால் இது லட்சக்கணக்கான மக்களுடைய வாழ்க்கை மற்றும் இறப்புக்குரிய கேள்வியாகவே உள்ளது. காவிரியை மீட்பதை மெய்ப்பித்து காட்டுவோம் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News