உள்ளூர் செய்திகள்
புதுவை தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் படகுகளை நிறுத்தி மீனவர்கள் மீன்பிடி சாதனங்களை பழுது பார்க்கும் பணியை த

61 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை காலம்

Published On 2022-04-15 04:54 GMT   |   Update On 2022-04-15 04:54 GMT
61 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை காலம் தொடங்கியது
புதுச்சேரி:

கடல் சார் மீன்வளங்களை நீண்ட காலத்திற்கு நிலை நிறுத்தும் வகையில் பாதுகாத்-திட, (ஏப். 15-ந் தேதி) முதல் ஜூன் 14-ந் தேதி வரையில் 61 நாட்களுக்கு புதுவை, காரைக்கால், ஏனாமில் மீன்பிடி தடைக்-காலம் அமல்படுத்தப்படுகிறது. 

புதுவையில் கனக-செட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் வரையிலும் உள்ள மீனவ கிராமங்களிலும், காரைக்கால் கடல் பகுதியில் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் மீனவ கிராம் வரை, ஏனாம் மீன்பிடி பகுதிகளிலும் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. 

இந்த காலகட்டத்தில், கட்டுமரம், நாட்டு படகுகளை தவிர அனைத்து வகை படகுகள், குறிப்பாக இழுவலை கொண்டு விசைப்படகில் மீன்பிடிப்பது தடை செய்யப்படுகிறது. மத்திய அரசின் மீன்வளத்துறை அமைச்சக துறை செயலர் அறிவுறுத்தலின்படி இந்த தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. 
Tags:    

Similar News