தொழில்நுட்பம்
ரியல்மி சி20

ரூ. 6999 துவக்க விலையில் ரியல்மி சி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-04-08 10:48 GMT   |   Update On 2021-04-08 10:48 GMT
ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் சி25, சி20 மற்றும் சி21 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது.


ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் சி20, சி21 மற்றும் சி25 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன்களில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் சி20 மற்றும் சி21 மாடல்கள் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி சி25 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார், 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி B&W லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா, 6000 எம்ஏஹெத் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. 



ரியல்மி சி20 மாடலில் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. ரியல்மி சி21 மாடலின் பின்புறம் கைரேகை சென்சார் உள்ளது.

ரியல்மி சி20 மாடல் கூல் புளு மற்றும் கூல் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், முதல் பத்து லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் ரூ. 6,799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரியல்மி சி21 மாடல் கிராஸ் புளூ மற்றும் கிராஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 7999 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரியல்மி சி25 மாடல் வாட்டரி கிரே மற்றும் வாட்டரி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 9,999 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 10,999 ஆகும்.
Tags:    

Similar News