செய்திகள்
ஆழியாறு.

ஆழியாறு பாசன திட்ட தினம் அறிவிப்பு - பி.ஏ.பி விவசாயிகள் முதல்வருக்கு நன்றி

Published On 2021-09-10 07:57 GMT   |   Update On 2021-09-10 07:57 GMT
பி.ஏ.பி திட்டத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் சிலை அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
உடுமலை:-

திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சி நீர்வளத்துறை தலைமை அலுவலகத்திற்கு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெயர் சூட்டப்படும் என்றும் பி.ஏ.பி திட்டத்தை முன்னாள் பிரதமர் நேரு 1961 துவக்கி வைத்த நாளான அக்டோபர் 7-ந்தேதியை ஆழியாறு பாசன திட்ட தினம் என்றும் சட்டசபை சட்டப்பேரவையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு வெளியிட்டுள்ளதை வரவேற்கிறோம்.

மேலும் இங்கு கட்டப்படும் அரங்கத்திற்கு வி.கே பழனிச்சாமி பெயர் சூட்டப்படும் என்றும் மேல்தளத்திற்கு சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படும் என்றும் பி.ஏ.பி திட்டத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் சிலை அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதற்கு காரணமான தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன் ஆகியோருக்கு பி.ஏ.பி திட்டத்தில் பயன் பெறும் 3.75 விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறன் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News