செய்திகள்
வைரல் புகைப்படம்

ரெமிடிஸ்விர் தடுப்பூசி என கூறி வைரலாகும் புகைப்படம்

Published On 2021-05-06 05:00 GMT   |   Update On 2021-05-06 05:00 GMT
கொரோனா தொற்றை சரி செய்யும் ஆற்றல் கொண்டது என கூறும் மருந்துகள் பற்றி டெல்லி காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


கொரோனாவைரஸ் தொற்றுக்கு தீர்வு கிடைக்காதா என பொதுமக்கள் ஏங்கி தவிக்கின்றனர். இந்த நிலையில், கோவிப்ரி எனும் தடுப்பூசி பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தடுப்பூசியை பலர் ரெமிடிஸ்விர் என குறிப்பிட்டு வருகின்றனர்.

ரெமிடிஸ்விர் கொரோனா தொற்றை சரி செய்யும் ஆற்றல் கொண்டிருக்கவில்லை. எனினும், மருத்துவர்கள் இந்த மருந்தை பயன்படுத்தி கொரோனா தொற்றின் தீவிரத்தை குறைக்க முயற்சிக்கின்றனர். இதன் காரணமாக இந்த மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.



இந்த நிலையில், கோவிப்ரி பாக்கெட்கள் மற்றும் ரெமிடிஸ்விர் ஊசி படங்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. பலர் இந்த மருந்து கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கானது என கூறி இதை தேவைப்படுவோர் பெற்றுக் கொள்ளலாம் என வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், கோவிப்ரி போலியான மருந்து என தெரியவந்துள்ளது. உண்மையில் அது ரெமிடிஸ்விர் தடுப்பூசி கிடையாது. கோவிப்ரி பெயரில் ரெமிடிஸ்விர் ஊசி எதுவும் பயன்பாட்டில் இல்லை. இதுகுறித்து வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம் என டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News