செய்திகள்
எலியை கண்டு அதிர்ச்சியடைந்த உறுப்பினர்கள்.

ஸ்பெயின் பாராளுமன்றத்திற்குள் நுழைந்த எலி- அலறியடித்து ஓடிய உறுப்பினர்கள்

Published On 2021-07-24 09:44 GMT   |   Update On 2021-07-24 14:50 GMT
ஸ்பெயின் பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது எலி குறுக்கும் நெடுக்குமாக ஓடியதால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
மாட்ரிட் :

ஸ்பெயின் பாராளுமன்ற கூட்டம் கடந்த புதன்கிழமையன்று நடைபெற்ற போது ஒரு கலகல சம்பவம் நடந்துள்ளது.

பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் மேலவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் வாக்களிக்க இருந்தனர். அப்போது பாராளுமன்றத்திற்குள் ஒரு எலி நுழைந்ததால் உறுப்பினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. பின் அங்குள்ளவர்களின் கால்களுக்குள் அங்கும் இங்குமாக ஓடிய எலியால் எப்போதும் அமைதியாக விறுவிறுப்புடன் இயங்கும் பாராளுமன்ற கூட்டத்தை சிறிது நேரம்  ஒத்திவைத்தனர்.

அதன்பின்னர் அவையில் ஒரு உறுப்பினர் பேசத் தொடங்கியதும், மீண்டும் எலி குறுக்கே ஓடியது. இதைக் கண்டதும் அந்த உறுப்பினர் முகக்கவசம் போட்டபடியே கூச்சலிட்டுக் கொண்டு ஓடும் வீடியோ காட்சிகள் அங்குள்ள கேமராக்களில் பதிவாகி உள்ளன.

பின்னர் ஒரு வழியாக அவைத் துணைத் தலைவர் ஜுவான் மரின் எலியைப் பிடித்து அப்புறப்படுத்தினார். இதற்கு பிறகு மீண்டும் பாராளுமன்றம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
Tags:    

Similar News