செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

பக்ரீத் திருநாள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Published On 2020-07-31 05:13 GMT   |   Update On 2020-07-31 05:13 GMT
பக்ரீத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை உலகிற்கு பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைப் பணிக்காக தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த இறைத்தூதர் இப்ராஹிம், இறைவனின் விருப்பத்திற்கேற்ப தன்னுடைய ஒரே மகன் இஸ்மாயிலை பலியிட துணிந்தார். இறைவனுக்காக தன்னுடைய மகனையே இழக்க முன்வந்த இறைத்தூதர் இப்ராஹிமின் தன்னலமற்ற தியாகத்தையும் இறை பக்தியையும் நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த இனிய நாளில், திருக்குரான் போதிக்கும் நெறிமுறைகளான அன்பு, அமைதி, மனிதநேயத்தை மக்கள் மனதில் நிறுத்த வேண்டும். அன்பு, சகோதரத்துவத்துடன், ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று தெரிவித்து, இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News