செய்திகள்
எலுமிச்சை பழம்

கோடைகாலம் என்பதால் எலுமிச்சை பழம் கிலோ ரூ.120-க்கு விற்பனை

Published On 2021-04-17 10:41 GMT   |   Update On 2021-04-17 10:41 GMT
எலுமிச்சை பழம் வரத்து குறைவாக இருக்கும் நிலையில், தேவை அதிகரித்து உள்ளதால் விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோவை:

கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை பருகி வருகின்றனர். அதிலும் எலுமிச்சை பழ ஜூஸ்களை பலரும் விரும்பி பருகுகின்றனர்.

கொரோனா பாதிப்பை தடுக்க வைட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சைக்கு அதிக வரவேற்பு உள்ளது. கோவை பகுதியில் உள்ள மார்க்கெட்டுகளில் எலுமிச்சை பழம் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் எலுமிச்சைபழம் விலை உயர்ந்துள்ளது. முன்பு கிலோ ரூ.80 ஆக இருந்த எலுமிச்சை தற்போது கிலோ ரூ.120 ஆக உயர்ந்துள்ளது. மொத்த விலையில் கிலோ 100-க்கும், சில்லரை விலையில் கிலோ ரூ.120 க்கும் எலுமிச்சை பழம் விற்பனை ஆவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தற்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து மட்டும் எலுமிச்சை பழம் கொண்டு வரப்படுகிறது. வரத்து குறைவாக இருக்கும் நிலையில், தேவை அதிகரித்து உள்ளதால் விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News