உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

இணைநோய் உள்ளவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளக்கூடாது - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

Published On 2022-01-12 04:33 GMT   |   Update On 2022-01-12 04:33 GMT
சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி, சோர்வு ஏற்பட்டால் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும்.
திருப்பூர்:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து வருகிறது. 

இதில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் இணைநோய் உள்ளவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களை கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.

சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி, சோர்வு ஏற்பட்டால், உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்துதல் மேற்கண்ட வயதினருக்கு உகந்தது அல்ல. எனவே குடும்பத்தினர் கவனமுடன் இருந்து முதியோர்களை பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்:

வீட்டுத் தனிமையில் இருந்த சிலர் அலட்சியமாக இருந்ததால் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கும் தொற்று பரவியுள்ளது. 60 வயதை கடந்தவருக்கு பாதிப்பு ஏற்படும்போது அவரை மீட்டுக்கொண்டு வர உயிர்காக்க சிரமங்கள் ஏற்படுவதால் வீட்டுத் தனிமையில் வைத்திருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
Tags:    

Similar News