செய்திகள்
பயணிகள் இன்றி வெறிச்கோடி காணப்படும் விமான நிலையம்

மேற்கு வங்கத்தில் விமான சேவைகள் நிறுத்தம்- மம்தா பானர்ஜி உத்தரவு

Published On 2020-07-25 04:09 GMT   |   Update On 2020-07-25 04:09 GMT
கொரோனா தொற்று காரணமாக இன்று முதல் மேற்கு வங்கத்திற்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கொல்கத்தா:

மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்று பரவி வருவதால் வாரத்தில் இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்றும், 29ம் தேதியும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். மாநிலத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இன்று முதல் 29ம் தேதி வரை விமான சேவைகளை நிறுத்தி வைக்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். 

தலைநகர் கொல்கத்தாவில் கொரோனா தொற்று பரவியதற்கு விமானங்கள் இயக்கப்பட்டதும் ஒரு காரணம் என்று மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை, டெல்லி, உள்ளிட்ட நகரிலிருந்து வரும் விமானங்களுக்கு மேற்கு வங்கத்தில் ஏற்கனவே தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News