இந்தியா
கொரோனா வைரஸ் பரிசோதனை

திருப்பதி ஐ.ஐ.டி.யில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2022-01-24 08:09 GMT   |   Update On 2022-01-24 08:09 GMT
ஆந்திர மாநிலம் குப்பத்தில் திராவிட பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 65 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
திருப்பதி:

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதியில் ஐ.ஐ.டி. இயங்கி வருகிறது. இங்கு பிடெக், எம்டெக், பி.எச்.டி உள்ளிட்ட படிப்புகளில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக முதுகலை மாணவர்கள் தவிர்த்து 600 மாணவர்கள் கடந்த மாதம் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது பி.டெக், எம்.டெக், பி.எச்.டி படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்கள் 214 பேர் மட்டும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் 72 மாணவர்கள், 30 ஊழியர்கள் என 102 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

மாணவர்கள் தங்கியிருந்த விடுதி மற்றும் கல்லூரி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் கல்லூரி விடுதி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.

ஆந்திர மாநிலம் குப்பத்தில் திராவிட பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 65 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதேபோல் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஏர்ரகடா மார்பக மருத்துவமனையில் 17 டாக்டர்கள், 16 ஊழியர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News