செய்திகள்
கோப்புப்படம்

4-வது காலாண்டில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - மத்திய அரசு தகவல்

Published On 2020-12-31 20:36 GMT   |   Update On 2020-12-31 20:36 GMT
2020-21-ம் நிதியாண்டின் மார்ச் 31-ந்தேதி வரையிலான கடைசி காலாண்டில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை காலாண்டு அடிப்படையில் மத்திய அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் 2020-21-ம் நிதியாண்டின் கடைசி காலாண்டுக்கான (ஜனவரி-மார்ச்) வட்டி விகிதத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

இது தொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘2020-21-ம் நிதியாண்டின் மார்ச் 31-ந்தேதி வரையிலான கடைசி காலாண்டில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. 3-வது காலாண்டுக்கு (அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை) வெளியிடப்பட்டு இருந்த வட்டி விகிதமே தொடரும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்தவகையில் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் ஆகியவற்றுக்கு ஆண்டு வட்டி விகிதம் முறையே 7.1 மற்றும் 6.8 சதவீதமாக இருக்கும். மூத்த குடிமக்களுக்கான ஐந்தாண்டு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதமாக தக்க வைக்கப்பட்டு உள்ளது.

இதைப்போல சேமிப்பு முதலீடுகளுக்கான ஆண்டு வட்டி விகிதமும் 4 சதவீதமாக தக்க வைக்கப்பட்டு உள்ளதாக நிதியமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News