இந்தியா
நிர்மலா சீதாராமன் முந்தைய பட்ஜெட் தயாரிப்பின் போது அல்வா கிண்டியா பழைய படம்

கொரோனாவால் கைவிடப்பட்ட ‘அல்வா’ கிண்டும் பழக்கம்- நிதி அமைச்சக அதிகாரிகள் ஏமாற்றம்

Published On 2022-01-28 12:13 GMT   |   Update On 2022-01-28 12:49 GMT
பட்ஜெட் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கும் போது பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு அவர்களின் அலுவலகத்தில் அல்வா கிண்டி கொடுப்பது வழக்கம்.

புதுடெல்லி:

மத்திய பட்ஜெட் வருகிற 1-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். கடந்த முறை போல இந்த முறையும் காகிதம் இல்லாத டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பட்ஜெட் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கும் போது பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு அவர்களின் அலுவலகத்தில் அல்வா கிண்டி கொடுப்பது வழக்கம்.

பட்ஜெட் தாக்கல் செய்யும் மத்திய நிதி மந்திரியே அல்வாவை கிண்டி ஊழியர்களுக்கு கொடுப்பார். அதன் பிறகு அலுவலக ஊழியர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதி கிடையாது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை அவர்கள் அலுவலகத்திலேயே தங்கி இருக்க வேண்டும்.

ஏற்கனவே பட்ஜெட் தாக்கல் செய்யும் போது அல்வா கிண்டும் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்று அல்வா கிண்டி ஊழியர்களுக்கு வழங்கினார். இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று உச்சத்தில் உள்ளது. இதையொட்டி இந்த முறை பட்ஜெட் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கும் நிலையில் அல்வா கிண்டும் பழக்கம் கொரோனா காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நிதி அமைச்சக அதிகாரிகள், ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... கொச்சி அருகே நள்ளிரவில் சரக்கு ரெயில் தடம் புரண்டது- 5 ரெயில்கள் ரத்து

Tags:    

Similar News