தொழில்நுட்பம்
ஐபோன் 11 ப்ரோ

ஐபோன் 12 சீரிஸ் வெளியீட்டு விவரம்

Published On 2020-07-27 06:34 GMT   |   Update On 2020-07-27 06:34 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 12 சீரிஸ் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 12 சீரிஸ் வெளியீட்டு தேதி ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக ஆப்பிள் முந்தைய ஆண்டுகளில் பின்பற்றிய வெளியீட்டு தேதியிலேயே ஒவ்வொரு ஆண்டும்  புதிய ஐபோன்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஐபோன் வெளியீட்டு தேதி ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிகழ்வு செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 10 செவ்வாய் கிழமையில் புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போதைய தகவல்களில் கூறப்பட்டுள்ள செப்டம்பர் 8 ஆம் தேதி செவ்வாய் கிழமை ஆகும்.



செப்டம்பர் 8 ஆம் தேதி நிகழ்வில் புதிய ஐபோன்12, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடல்கள் அறிமுகம்  செய்யப்படும். இதைத் தொடர்ந்து அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறும் மற்றொரு விழாவில் ஆப்பிள் ஐபேட் ப்ரோ, ஆப்பிள் ஏஆர் கிளாஸ், ஆப்பிள் சிப்செட்கள் கொண்ட புதிய மேக்புக் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

ஐபோன் 12 விலை ஐபோன் 11 போன்றே நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோன் பேக்கேஜிங் ரென்டர்களின் படி புதிய ஐபோனிற்கான லைட்னிங் கேபிள் மற்றும் மேனுவல் புக்லெட் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இவைதவிர சார்ஜர் மற்றும் இயர்பாட்ஸ் வைப்பதற்கான இடம் நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே புதிய ஐபோன் பாக்ஸ் மெல்லியதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களின்படி புதிய ஐபோன் 5ஜி நெட்வொர்க் வசதி கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
Tags:    

Similar News