உள்ளூர் செய்திகள்
மாணவர்கள் சாதனை

ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 12 பேர் சாதனை

Published On 2022-01-11 09:47 GMT   |   Update On 2022-01-11 09:47 GMT
பாரதியார் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 12 பேர் சாதனை படைத்துள்ளனர்.
ஊட்டி:

ஊட்டி அரசு கலை கல்லுரி மாணவ, மாணவிகள், 12 பேர் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் சாதனை படைத்துள்ளனர். 

கோவை பாரதியார் பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ், ஊட்டி அரசு கலை கல்லூரி இயங்கி வருகிறது. கடந்த 2020-21ம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் முதுகலைக்கான தேர்வில், இக்கல்லூரியில் பயின்ற, 19 மாணவ, மாணவிகள் பல்கலை தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

அதில் வைசாலி ஜெயின் (சுற்றுலாவியல்- இளநிலை), திரிஷ்யா (வனவிலங்கு உயிரியல்-இளநிலை), சோனாலி (வரலாறு- முதுநிலை), அக்ஷயா  (ஆங்கிலம்- முதுநிலை), வினிதா (தாவரவியல்- முதுநிலை), கார்த்திகா (வனவிலங்கு உயிரியல் -முதுநிலை) உள்ளிட்ட 6 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.

பூஜா (சுற்றுலாவியல் -இளநிலை), சந்திரலேகா(வரலாறு- முதுநிலை), இந்து பிரியா (ஆங்கிலம்- முதுநிலை), மனோஜ்குமார் (வனவிலங்கு உயிரியல்-இளநிலை), தீபன் (வனவிலங்கு உயிரியல்- முதுநிலை) உள்ளிட்ட 5 பேர் இரண்டாம் இடத்தையும், கிரிஹரன் (தாவரவியல்- முதுநிலை) இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

சாதனை படைத்த கல்லூரி மாணவ, மாணவியருக்கு, கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில், பேராசிரியர் ராமகிருஷ்ணன் முன்னிலையில், துறை தலைவர்கள், பேராசிரியர்கள்,  உதவி பேராசிரியர்கள்,  விரிவுரையாளர்கள் உள்பட பலர் பாராட்டு தெரிவித்தனர். 
Tags:    

Similar News