உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லையில் 2-வது நாளாக வேட்புமனு தாக்கல் இல்லை

Published On 2022-01-29 09:41 GMT   |   Update On 2022-01-29 09:41 GMT
நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் 2-வது நாளாக இன்றும் வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
நெல்லை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

தொடர்ந்து 4-ந்தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். இன்று சனிக் கிழமையும் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 17 பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று நெல்லை மாவட்டத்தில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் இன்று 2-வது நாளாக பிற்பகல் வரை யாரும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யவில்லை.

ஆனால் மாநகராட்சி பகுதியில் 500 பேரும், நகராட்சி பகுதியில் 300 பேரும், பேரூராட்சி பகுதிகளில் 500 பேரும் வேட்பு மனுக்களை வாங்கி சென்றுள்ளனர்.

பிரதான கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாததால் யாரும் வேட்பு மனுக்கள் தாக்கலி செய்யவில்லை.

நாளை விடுமுறை தினம் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சுயேட்சை வேட்பா ளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என தெரிகிறது.
Tags:    

Similar News