செய்திகள்
மெரினாவில் போலீஸ் குவிப்பு

மாணவர்கள் போராட்ட அறிவிப்பால் மெரினாவில் போலீஸ் குவிப்பு

Published On 2021-11-21 05:26 GMT   |   Update On 2021-11-21 05:26 GMT
கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் மெரினா கடற்கரையில் சட்ட விரோதமாக கூடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமி‌ஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

சென்னை:

தமிழக கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடத்த கல்லூரி தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதையொட்டி மாணவர்களுக்கு கல்லூரிகளில் நேரடி தேர்வை நடத்த கூடாது மீண்டும் ஆன்லைனில் மட்டுமே தேர்வு நடத்த வேண்டும் எனக்கோரி மதுரை உள்பட பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதைதொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த வரும்படி வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் அறிவிப்பு செய்து இருந்தனர். ஆனால் இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என போலீசார் மறுத்தனர்.

இது போன்று பொய்யான வதந்திகளை சமூக வலை தளங்களில் பரப்புவர்கள் மீது தகவல் தொழில் நுட்ப சட்டம் உள்பட இதர சட்டப்பிரிவுகள்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

மெரினா கடற்கரை பகுதியில் எந்த விதமான போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவும் அமலில் உள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் மெரினா கடற்கரையில் சட்ட விரோதமாக கூடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமி‌ஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இதையொட்டி மெரினா கடற்கரையில் மயிலாப்பூர் துணை கமி‌ஷனர் தீஷா மிட்டல் தலைமையில் 6 உதவி கமி‌ஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 200 போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர்..


இதையொட்டி மெரினா கடற்கரையில் சந்தேகத்துக்குரிய வகையில் கூட்டமாக திரண்டவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். மாணவர்கள் போராட்டம் அறிவிப்பு காரணமாக நிலைமை சீராகும் வரை மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு நீடிக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்...பேஸ்புக் காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண் கைது

Tags:    

Similar News