தொழில்நுட்பச் செய்திகள்
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

Published On 2022-01-08 04:21 GMT   |   Update On 2022-01-08 04:21 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் இந்திய முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.


சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போனினை ஜனவரி 10 ஆம் சேசி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு சில தினங்களுக்கு முன் துவங்கியது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

அம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடலில் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 32 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.



கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி, வைபை, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடலின் விலை ரூ. 52 ஆயிரத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டனில் இந்த ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் விலை இந்திய மதிப்பில் ரூ. 70,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News