செய்திகள்
கோப்பு படம்.

சென்னையில் 994 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

Published On 2020-09-13 13:52 GMT   |   Update On 2020-09-13 13:52 GMT
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 694 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று 5,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 5,02,759 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 4,47,366 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,717 பேர் குணமடைந்து உள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு 47,012 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் தற்போது கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10,393 ஆக உள்ளது. கொரோனாவால் இன்று மட்டும் 74 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 8,381 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் இன்று ஒரே நாளில் 994 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 1,48,584 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82,387 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 58,88,086 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 84,308 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மொத்த கொரோனா பரிசோதனை நிலையங்கள் - 168 (65 அரசு + 103 தனியார்) 

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் - 11
செங்கல்பட்டு - 299
சென்னை - 994
கோவை - 490
கடலூர் - 251
தர்மபுரி - 39
திண்டுக்கல் - 68
ஈரோடு - 133
கள்ளக்குறிச்சி - 126
காஞ்சிபுரம் - 189
கன்னியாகுமரி - 110
கரூர் - 48
கிருஷ்ணகிரி - 67
மதுரை - 78
நாகை - 154
நாமக்கல் - 124
நீலகிரி - 70
பெரம்பலூர் - 23
புதுக்கோட்டை - 134
ராமநாதபுரம் - 16
ராணிப்பேட்டை - 130
சேலம் - 309
சிவகங்கை - 46
தென்காசி - 28
தஞ்சாவூர் - 151
தேனி - 88
திருப்பத்தூர் - 65
திருவள்ளூர் - 300
திருவண்ணாமலை - 188
திருவாரூர் - 143
தூத்துக்குடி - 45
திருநெல்வேலி - 126
திருப்பூர் - 291
திருச்சி - 86
வேலூர் - 106
விழுப்புரம் - 128
விருதுநகர் - 35
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 0
உள்நாடு - 4
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

மொத்தம் - 5,693
Tags:    

Similar News