ஆன்மிகம்
பக்தர்கள் சாம்பல் பூசணியில் விளக்கேற்றி சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தியதை படத்தில் காணலாம்.

அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா

Published On 2021-02-05 08:17 GMT   |   Update On 2021-02-05 08:17 GMT
அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது. இதில் பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
நல்லம்பள்ளியை அடுத்த அதியமான்கோட்டையில் உள்ளது பிரசித்தி பெற்ற காலபைரவர் கோவில். இந்த கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி கோவிலில் பல்வேறு யாக சாலை பூஜைகள், ஹோம பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் மூலவருக்கு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டு, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாம்பல் பூசணியில் விளக்கேற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி, மூலவரை தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் சண்முகம், கோவில் குருக்கள் கிருபாகரன் மற்றும் உளவாரப் பணிக்குழுவினர் ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News