லைஃப்ஸ்டைல்
பெண்கள் விரும்பும் பாந்தினி ரகப் புடவைகள்

பெண்கள் விரும்பும் பாந்தினி ரகப் புடவைகள்

Published On 2021-02-17 04:25 GMT   |   Update On 2021-02-17 04:25 GMT
பழங்காலக் கலைகள் எண்ணற்றவை இந்தியாவில் இருந்தாலும், பாந்தினி புடவையின் பாரம்பரியம் தனித்துவமானது. பாந்தினி ரகப் புடவைகள் பருத்தி, மஸ்லின், பட்டு உள்ளிட்ட துணிகளில் தயாராகின்றன.
ஜவுளித் தொழில்நுட்பத்தில் என்னதான் புதுமைகள், நவீனங்கள் வந்தாலும், காலத்தை வென்று நிற்கும் பழங்கால கலைநுட்பங்களுக்கு அவை ஈடாகாது. அப்படிப்பட்ட பழங்காலக் கலைகள் எண்ணற்றவை இந்தியாவில் இருந்தாலும், பாந்தினி புடவையின் பாரம்பரியம் தனித்துவமானது. குஜராத்தி, ராஜஸ்தான் போன்ற வடஇந்திய பாரம்பரிய ஜவுளிகளில் பளிச் நிறம் கொண்ட, விதவிதமான டிசைன்களில் சாயமேற்றப்பட்ட புடவைகளை நீங்கள் பார்த்திருக்கலாம். வரையப்பட்ட டிசைனுக்கு ஏற்ப, துணியை விரல்நகங்களைப் பயன்படுத்தி சுங்கிட்டு அதன் பின்பு சாயமேற்றித் தயாரிக்கப்படும் புடவை வகைகள்தான் பாந்தினி புடவைகள்.

இவ்வகைப் புடவைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் மஞ்சள், சிவப்பு, மெரூன், நீலம், பச்சை, மற்றும் கருப்பு. இதில் பயன்படுத்தப்படும் முக்கிய நிறங்கள் இயற்கையானவை. முடிச்சிட்டு சாயமிடும் முறை கைகளால் செய்யப்படுவதால், அது சிறந்த வண்ணங்களின் காம்பினேஷன் ஆக வெளிப்படுகிறது.

சிவப்பு மற்றும் மெரூன் நிறங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பாந்தினியின் வெவ்வேறு நிறங்கள், வெவ்வேறு அர்த்தங்கள் அளிப்பதாக நம்புகின்றனர். உதாரணத்திற்கு, புதிதாக திருமணமானவர்கள் சிவப்பு நிறம் அணிந்தால் நல்லதிர்ஷ்டமாம் என்பது பராம்பரியமான நம்பிக்கையாக கருதப்படுகிறது.

பாந்தினி ரகப் புடவைகள் பருத்தி, மஸ்லின், பட்டு உள்ளிட்ட துணிகளில் தயாராகின்றன. இந்த டிசைனில் புடவைகள் மட்டுமல்லாமல், காக்ரா சோளி, சுடிதார் ஷால், டர்பன் போன்ற ஆடைகளும் தயாராகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியர்களின் விருப்பத்துக்குரிய புடவைகளாக விளங்கிவரும் பாந்தினி சேலைகளை மக்கள் அதிகம் விரும்புவதால், இவற்றின் தேவையும் விற்பனையும் கடந்த சில பத்தாண்டுகளாக அதிகரித்துள்ளது. குறிப்பாகத் திருமணம், விழாக்காலங்களில் அதிகம் உடுத்தப்படுகிறது.

புடவை கடைகளிலும், ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் இப்போது பரபரப்பாக விற்பனை ஆவது லினன் புடவைகள். லினன் எனபது ஆளி (Flax) செடியின் நாரிலிருந்து தயாராகும் ஒரு நூல். பருத்தி போன்றே மிகவும் மென்மையானது. இதனை தயாரிக்கும் முறை சிறிது கடினமானதால், பருத்தியை விட விலை அதிகமாக இருக்கும். லினன் ஆடைகள் நூலிழைகளின் நடுவே மிகுந்த இடைவெளியுடன் காணப்படும். அதிகம் உறிஞ்சும் தன்மை மற்றும் விரைவில் உலரும் தன்மை கொண்டதால் வெப்ப பிரதேசத்தல் உள்ளவர்கள் உடுத்தஏற்ற ஆடை ரகமாகும். லினன் ஆடைகள் வேலைக்கு செல்பவர்கள் அணிய உகந்தவை.
Tags:    

Similar News