லைஃப்ஸ்டைல்
கோதுமை தட்டை

சத்தான ஸ்நாக்ஸ் கோதுமை தட்டை

Published On 2019-11-11 08:40 GMT   |   Update On 2019-11-11 08:40 GMT
குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் கோதுமை மாவில் தட்டை செய்து கொடுக்கலாம். இன்று இந்த தட்டை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 2 கப்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு



செய்முறை:

கடலைப்பருப்பை அரை மணி நேரம் நீரில் ஊறவைத்துக்கொள்ளவும்.

அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவை கொட்டி அதனுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், கடலைப் பருப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

பின்னர் சிறிதளவு தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

அதனை சிறு உருண்டைகளாக்குங்கள்.

உருண்டைகளை உள்ளங்கையில் வைத்து அழுத்தி மெலிதாக தட்டைபோல் ஆக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த தட்டைகளை கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

சுவையான கோதுமை தட்டை ரெடி.

இந்த தட்டையை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News