செய்திகள்

வாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை

Published On 2019-05-21 19:36 GMT   |   Update On 2019-05-21 19:36 GMT
வாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை:

தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைமுறைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்கு எண்ணும் மையங்களுக்குள் ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து முகவர்கள் ஒரு முறை 100 மீட்டர் வெளியே சென்றுவிட்டால், அவர்கள் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வாக்கு எண்ணும் மையங்களுக்குள் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு செல்லக் கூடாது. எனவே தான் ‘பேனா’ எடுத்து செல்ல அனுமதி இல்லை. பென்சில் வைத்துக் கொள்ளலாம். செல்போன் எடுத்து வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி, நுண் பார்வையாளர்கள் ஆகியோர் மட்டும் செல்போன் எடுத்து செல்ல தடை இல்லை. அதற்கு அவர்களுக்கு முறையான அனுமதி உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News