உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சோலார் உலர் களம் அமைக்க மானியம்

Published On 2022-01-13 05:29 GMT   |   Update On 2022-01-13 05:29 GMT
தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு சோலார் உலர் களம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உடுமலை:

விளைபொருட்களை உலர்த்த சோலார் உலர் களம் அமைக்க வேளாண் பொறியியல் துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. வேளாண் பொறியியல் துறை சார்பில் வேளாண் விளைபொருட்களை உலர்த்துவதற்காக விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் சோலார் உலர் களம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு சோலார் உலர் களம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

400 சதுர அடி பரப்பளவில் கொப்பரை தேங்காய், கறிவேப்பிலை, மஞ்சள், நிலக்கடலை, மிளகாய் போன்ற பொருட்களை காய வைக்கும் வகையில் மண், குப்பை சேராமல் மதிப்பு கூட்டப்பட்ட தரமான விளை பொருள் உற்பத்தி செய்யும் வகையில் சோலார் உலர் களம் அமைக்கலாம்.

400 சதுர அடியில் அமைத்தால் ரூ. 3.06 லட்சம், ஆயிரம் சதுர அடியில் அமைத்தால் ரூ. 7.14 லட்சம் செலவாகும். இத்தொகையில் சிறு, குறு மற்றும் ஆதிதிராவிட பெண் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக அதிகப்பட்சமாக ரூ.3.50 லட்சம் வழங்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு வேளாண்பொறியியல் துறை உடுமலை உதவி கோட்ட செயற்பொறியாளர் முத்துராமலிங்கத்தை 98654 97731 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News