ஆட்டோமொபைல்

பி.எஸ். 6 ஹோன்டா ஆக்டிவா 125 அறிமுகம்

Published On 2019-06-12 11:32 GMT   |   Update On 2019-06-12 11:32 GMT
ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் பி.எஸ். 6 ஆக்டிவா 125 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் ஆக்டிவா 125 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டர் இந்தியாவில் செப்டம்பர் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவின் முதல் பி.எஸ். 6 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. 

பி.எஸ். 6 ஹோன்டா ஆக்டிவா 125 மாடலில் ஃபியூயன் இன்ஜெக்‌ஷன் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது. பி.எஸ். 6 ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் வழங்கப்பட இருக்கும் என்ஜின் விவரங்கள் அறிவிக்கப்படவில்லை என்ற போதும், புதிய ஸ்கூட்டரில் 125 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



தற்சமயம் பி.எஸ். 4 ஆக்டிவா 125 என்ஜின் 8.4 பி.ஹெச்.பி. @6500 ஆர்.பி.எம். மற்றும் 10.54 என்.எம். டார்க் @5000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. புதிய ஸ்கூட்டரில் செமி-டிஜிட்டல் கன்சோல், 4 இன் 1 இக்னிஷன் ஸ்விட்ச் வழங்கப்படுகிறது. இத்துடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப், பக்கவாட்டில் குரோம் இன்செர்ட்கள், புதிய டெயில் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

பி.எஸ். 6 ஆக்டிவா 125 மாடல் ரெபல் ரெட் மெட்டாலிக், பிளாக், ஹெவி கிரே மெட்டாலிக், மிட்நைட் புளு மெட்டாலிக், பியல் பிரெஷியஸ் வைட், மெஜஸ்டிக் பிரவுன் மெட்டாலிக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News