ஆன்மிகம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள்

இன்று மார்கழி மாதப்பிறப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள்

Published On 2020-12-16 07:03 GMT   |   Update On 2020-12-16 07:03 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு ஆண்டாள்- ரெங்கமன்னார் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
108 திவ்யதேசங்களில் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். இங்கு ஆண்டாள், மார்கழி மாதம் 30 நாட் களும் பாவை நோன்பிருந்து திருப்பாவை பாடி, கண்ண னுக்கு பாமாலை சூடி பரந்தாமன் கண்ணனையே மணந்தாள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் சிறப்பாக உற்சவம் நடைபெறும்.

அதன்படி இன்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு ஆண்டாள்- ரெங்கமன்னார் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஆண்டாளுக்கு திருப்பாவை பாடல்கள் பொறித்த தங்க இழை கொண்டு சிறப்பாக நெய்யப்பட்ட பட்டுப்புடவை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கோவில் அர்ச்சகர் ராஜா பட்டர் பூஜைகளை செய் தார். அதிகாலை 3 மணிக்கு ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோவில் அலுவலர்கள், திருக்கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

முன்னதாக நேற்று (15-ந் தேதி) ஆண்டாள் கோவில் முன்பு அமைந் துள்ள வேதபிரான் பட்டர் திருமாளிகையில் பச்சைப் பரப்பல் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு எழுந்தருளிய ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சடகோப ராமானுஜர் மற்றும் பக்தர் கள் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News