செய்திகள்
நரேந்திர சிங் தோமர்

நாளை மதியம் விவசாயிகளுடன் 9-வது கட்ட பேச்சுவார்த்தை: மத்திய அமைச்சர் தோமர்

Published On 2021-01-14 12:40 GMT   |   Update On 2021-01-14 12:40 GMT
மத்திய அரசு - விவசாயிகள் சங்கங்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான 9-வது கட்ட பேச்சுவார்த்தைக்கான நாளை நடைபெறும் என மத்திய மந்திரி தோமர் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடைய போராட்டம் 50 நாட்களை கடந்துள்ளது. இதுவரை 8 முறை மத்திய அரசுக்கும் விவசாயிகள் சங்கங்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஆரோக்கியமான உடன்பாடு எட்டப்படவில்லை.

இதற்கிடையில் உச்சநீதிமன்றம் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர நான்கு பேர் கொண்ட ஒரு கமிட்டியை அமைத்துள்ளது.

இந்த நிலையில் 9-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறும் என மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் அறிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து நரேந்திர சிங் தோமர் கூறுகையில் ‘‘திறந்த மனநிலையுடன் விவசாயிகளின் தலைவர்களுடன் பேசுவதற்கு அரசு தயாராக இருக்கிறது. நாளை மதியம் 12 மணிக்கு மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறும். இதில் நேர்மறையாக விவாதங்கள் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
Tags:    

Similar News