செய்திகள்
டி.எம்.தாமஸ் ஐசாக்

கொரோனா மற்றும் பொது முடக்கத்தால் ரூ. 1.56 லட்சம் கோடி வருவாய் இழப்பு: கேரளா அமைச்சர்

Published On 2021-01-14 16:02 GMT   |   Update On 2021-01-14 16:02 GMT
இயற்கை சீற்றத்தால் ஏற்கனவே பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா மற்றும் பொது முடக்கத்தால் ரூ. 1.56 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கேரள மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநில சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கையை அம்மாநில நிதியமைச்சர் டி.எம். தாமஸ் ஐசாக் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.

அப்போது ஏற்கனவே 2019-2020-ல் ஒக்கி புயல் மற்றும் இரண்டு வெள்ளப் பேரழிவு காரணமாக பொருளாதாரம் சிக்கலை சந்தித்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதனால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் கேரள மாநிலத்திற்கு 1.56 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாளைய பட்ஜெட்டில் விவாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்க அரசு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஒரு லட்சத்திற்கு மேலான வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பொருளாதார சரிவு கடந்த ஆண்டைவிட 3.45 சதவீதம் குறைவு என்றும் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News