செய்திகள்
வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர்

விவசாயிகளுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயார், ஆனால் ஒரு கண்டிஷன் -மத்திய மந்திரி தோமர்

Published On 2021-06-09 05:07 GMT   |   Update On 2021-06-09 05:07 GMT
எண்ணெயில் கலப்படம் செய்வதை அரசாங்கம் தடுத்து நிறுத்தியதால் கடுகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது என மத்திய வேளாண் மந்திரி தோமர் தெரிவித்தார்.
புதுடெல்லி:

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு எப்போதும் பேசி உள்ளது. புதிய வேளாண் மசோதாக்களை ரத்து செய்யும் கோரிக்கை தவிர வேறு வழிகள் குறித்து விவாதிக்க விவசாய அமைப்புகள் தயாராக இருந்தால், அவர்களுடன் பேச அரசாங்கம் தயாராக உள்ளது.

மத்திய பிரதேச பாஜக அரசில் நிலையற்ற தன்மை எதுவும் இல்லை. மத்திய பிரதேச அரசு கொரோனா சூழ்நிலையை சரியாக கையாளுகிறது. முதல்வர் சவுகான் மாற்றப்படுவார் என்று வெளியாகும் தகவல் உண்மை அல்ல. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. எனவே, முதல்வர் யார் என்பதை பாஜகவே தீர்மானிக்கும். 
பாஜக
 முதல்வர் பற்றி பேச காங்கிரசுக்கு உரிமை இல்லை.



எண்ணெயில் கலப்படம் செய்வதை அரசாங்கம் தடுத்து நிறுத்தியதால் கடுகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இந்த முடிவு விவசாயிகளுக்கு பயனளிக்கும். சமையல் எண்ணெய்களின் விலைகள் குறித்து அரசாங்கம்  கவனித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News