ஆன்மிகம்
பவுர்ணமியையொட்டி மலைக்கோட்டை பகுதியில் கிரிவலம் சென்ற பக்தர்கள்

பவுர்ணமியையொட்டி மலைக்கோட்டை பகுதியில் கிரிவலம் சென்ற பக்தர்கள்

Published On 2021-01-29 08:09 GMT   |   Update On 2021-01-29 08:09 GMT
திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் பவுர்ணமியை முன்னிட்டு மலைக்கோட்டை நுழைவு வாயில் முன்பு திரண்ட பக்தர்கள், நடராஜர் சிலையை சப்பரத்தில் தூக்கிக்கொண்டு கிரிவலம் புறப்பட்டனர்.
திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி பவுர்ணமி தினமான நேற்று மாலை 5.30 மணி அளவில் அபிராமி அம்மன் பக்தர்கள் குழு சார்பில் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மலைக்கோட்டை நுழைவு வாயில் முன்பு திரண்ட பக்தர்கள், நடராஜர் சிலையை சப்பரத்தில் தூக்கிக்கொண்டு கிரிவலம் புறப்பட்டனர்.

அப்போது கிரிவலம் செல்லும் பாதையில் இருந்த வீடுகளின் முன்பு பொதுமக்கள் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து நடராஜரை வழிபட்டனர். ஆர்.வி.நகர், முத்தழகுபட்டி வழியாக சென்ற இந்த ஊர்வலம் மீண்டும் மலைக்கோட்டைக்கு வந்து நிறைவடைந்தது. இதில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பின்னர் மலைக்கோட்டை நுழைவு வாயில் முன்பு நடராஜர் சிலை இறக்கி வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. கிரிவலத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Tags:    

Similar News