செய்திகள்
கைது

மாசு கட்டுப்பாடு அதிகாரி போல் நடித்து தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியவர் கைது

Published On 2019-09-17 08:25 GMT   |   Update On 2019-09-17 08:25 GMT
மாசு கட்டுப்பாடு அதிகாரி போல் நடித்து தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்குன்றம்:

வேப்பேரியை சேர்ந்தவர் குணால். தொழில் அதிபர். இவர் செங்குன்றத்தை அடுத்த வடபெரும் பாக்கத்தில் பிளாஸ்டிக் கம்பெனி வைத்திருக்கிறார். இங்கு 50 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரி என்று கூறிக்கொண்டு ஒருவர் அங்கு சென்றார். இந்த கம்பெனி சுற்று சூழல் மாசுக்கு காரணமாக உள்ளது. புதிதாக தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து அந்த கம்பெனி அதிபர் குணால் அங்கு சென்று மாசு கட்டுப்பாடு அதிகாரி என்று கூறியவரிடம் பேசினார். அப்போது அவர் ரூ.5 லட்சம் கொடுத்தால்தான் கம்பெனியை நடத்தலாம். இல்லையென்றால் மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் பூட்டி சீல் வைத்து விடுவோம் என்று மிரட்டினார்.

இதனால் சந்தேகம் அடைந்த குணால், செங்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவகர்பீட்டர், பிளாஸ்டிக் கம்பெனிக்கு சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது மாசு கட்டுப்பாடு அதிகாரி என்று கூறியவர் பெயர் சுந்தர்ராஜ் (49). மாதவரம் தபால்பெட்டி பகுதியைச் சேர்ந்தவர். பணம் பறிக்கும் நோக்கத்தில் அதிகாரிபோல் நடித்து பிளாஸ்டிக் கம்பெனி அதிபரை மிரட்டியது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸ் அதிகாரி சுந்தர்ராஜ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News