ஆன்மிகம்
ஏடகநாதர் கோவில்

ஏடகநாதர் கோவிலில் அஷ்டமி சப்பர திருவிழா

Published On 2019-12-20 05:28 GMT   |   Update On 2019-12-20 05:28 GMT
சோழவந்தான் ஏடகநாதர் கோவிலில் அஷ்டமி சப்பர திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணம் அன்று கோவில்களில் இருந்து சுவாமி வீதி உலா வந்து நேரடியாக அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படியளப்பதாக(உணவு) கூறப்படுகிறது. சோழவந்தான் ஏடகநாதர் சுவாமி கோவிலில் நேற்று அஷ்டமி திருவிழா நடந்தது. இவ்விழாவையொட்டி பசு மடத்தில் பூஜை நடைபெற்று, கோவிலுக்கு அழைத்து வந்து அங்கு கோமாதாவிற்கு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் விநாயகர், முருகன் மற்றும் ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாள் கோவிலிலிருந்து புறப்பட்டு 5 மண்டகப்படிக்கு சென்றதும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பரம்பரை அறங்காவலர் சேவுகன் மற்றும் கோவில் செயல் அலுவலர் இளஞ்செழியன் உள்பட சோழவந்தான் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதர் சுவாமி கோவிலிலும், சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோவிலில் அஷ்டமி சப்பர திருவிழா நடைபெற்றது.

மேலூரில் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் அஷ்டமி சப்பர வீதி உலா நடந்தது. சிவன்கோவிலில் இருந்து தனித்தனி வாகனம் மூலம் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன் , சண்டிகேஸ்வரர் மற்றும் ரிஷப வாகனத்தில் சிவபெருமான் காமாட்சி தாயாருடன் வீதி உலா வந்தனர்.

இந்த வீதி உலாவின் போது சுவாமியின் பின்னால் சென்ற பெண்கள் அனைவரும் பச்சரிசி மாவினை எறும்புகளுக்கு உணவு அளிக்கும் விதமாக தூவி சென்று வழிபட்டனர்.
Tags:    

Similar News