அழகுக் குறிப்புகள்
அலுவலகம் செல்லும் பெண்களுக்கான ஆடை - அலங்காரங்கள்

அலுவலகம் செல்லும் பெண்களுக்கான ஆடை - அலங்காரங்கள்

Published On 2022-03-31 03:38 GMT   |   Update On 2022-03-31 03:38 GMT
அணியும் ஆடை, அலங்கார பொருட்களில் அழுக்கு, பிசிறு, பழமை தெரியாமல் இருப்பது நல்லது. இவையெல்லாம் சரியாக இருந்தால் வேலைகளில் முழுமையாக கவனம் செலுத்தலாம்.
வேலைக்கு செல்லும் பெண்கள் ஆடை தேர்வு விஷயத்தில் அதிக ஆர்வம் செலுத்துவார்கள். நேர்த்தியான விதத்தில் ஆடை அணிந்து செல்வது தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கும். சக ஊழியர்கள், அதிகாரிகள் மத்தியில் நல்ல மரியாதையை பெற்றுத் தரும்.

அலுவலகத்துக்கு எந்த மாதிரியான ஆடை அணிவது, அலங்காரம் செய்துகொள்வது என்று பார்க்கலாமா?

* வீடு, வெளியிடம், ஷாப்பிங் மால் போன்றவற்றுடன் அலுவலகத்தை ஒப்பிட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். ஆடை என்பது நேர்த்தியாய் தைக்கப்பட்டதாய் இருக்கட்டும். கசகசவென்ற டிசைன், ‘பளிச்’ நிறம் வேண்டாம். ஆடைகள் நளினமான டிசைனோடு அழகாக காட்சியளிக்கலாம். ஆனால் மற்றவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு பிரதிபலிக்கக்கூடாது. எம்பிராய்டரி போன்ற ஜிகினா வேலைப்பாடுகள் அதிகம் இல்லாமல் இருப்பதே நல்லது.

* உள்ளாடை விஷயத்திலும் உரிய கவனம் செலுத்துவது அவசியம். வெளியே ‘பளிச்’சென்று தெரியும் நிறத்திலான, அலங்காரமான பட்டைகள் கொண்ட பிரா வகைகளை தவிர்க்க வேண்டும். உடலழகை உயர்த்திக் காட்டும் விதத்திலான ஆடைகளை அலுவலகத்திற்கு அணிந்து செல்லக்கூடாது. உயர்தர பன்னாட்டு நிறுவனம் என்றால் நவநாகரிக பேஷன் உடைகளை உடுத்தலாம். ஆனால் சாதாரண நிறுவனங்களுக்கு அவை சரிப்பட்டு வராது.

* பெண்களின் தோற்றத்தை மெருகூட்டிக்காட்டுவதில் காலணிகளுக்கும், ‘பேக்’களுக்கும் முக்கிய இடம் இருக்கிறது. ஆதலால் தரமான பேக், காலணிகளை தேர்வு செய்யுங்கள். அவை மிதமான நிறங்களில் இருப்பது சிறந்தது. தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் பேஷனை முயற்சித்து பார்க்கலாம். ஆனால் அவையும் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் பேஷனாக அமைந்திருக்க வேண்டும். அன்றன்று அணியும் ஆடைக்கு பொருத்தமான பேக், காலணிகளை வாங்கிக் கொள்ள முடியும் என்றால், தாராளமாக வாங்கலாம்.

* நகை தேர்வு விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அது சிம்பிளாக, அதிக டிசைன்கள் இல்லாததாக இருக்க வேண்டும். ஒரு மோதிரம், ஒரு சாதாரண செயின் அணிவது போதுமானது. கம்மலும் காதுகளை ஒட்டிய நிலையில் இருந்தால் போதும். கைநிறைய கலகலவென வளையல்கள் அணிவதையும் தவிர்க்க வேண்டும். அலங்கார தோடுகள், பட்டையான நெக்லஸ், அனைத்து விரல்களிலும் மோதிரங்கள் அணிவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

* ஆடை, அலங்காரம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் வேலை பார்த்தால் மேக்கப் அதிகம் போடுவதை தவிர்க்க வேண்டும். எளிமையான, அவசிய தேவையான ‘மேக்கப்’ போடுவது எப்படி என்பதை அழகு நிபுணர்களிடம் கலந்தாலோசித்து, தெரிந்துகொள்ளுங்கள்.

* மேக்கப்பில் பிரகாசமான வண்ணங்களை தவிர்த்து விடுங்கள். உதடுகளைப் பளபளக்க செய்யும் விதமான லிப் பாம்களையும் தவிர்த்துவிடுங்கள்.

* நகங்களை முறையாக வெட்டிப் பராமரியுங்கள். அதிக வாசம் கொண்ட ‘சென்ட்’ வகைகளையும் தவிர்த்து விடுங்கள். கூந்தல் அலங்காரம் கூட மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது. பின்னலிட்டோ, கொண்டையிட்டோ இருக்கட்டும்.

* அணியும் ஆடை, அலங்கார பொருட்களில் அழுக்கு, பிசிறு, பழமை தெரியாமல் இருப்பது நல்லது. இவையெல்லாம் சரியாக இருந்தால் வேலைகளில் முழுமையாக கவனம் செலுத்தலாம்.
Tags:    

Similar News