செய்திகள்
எழும்பூரில் போலீஸ் அருங்காட்சியகத்தை திறந்து வைத்த முக ஸ்டாலின்

எழும்பூரில் போலீஸ் அருங்காட்சியகத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Published On 2021-09-28 05:50 GMT   |   Update On 2021-09-28 08:34 GMT
எழும்பூர் போலீஸ் அருங்காட்சியகத்தில் போலீசார் பயன்படுத்திய பழமையான உடைகள் முதல் ஆயுதங்கள் வரை இடம்பெற்றுள்ளன.
சென்னை:

சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் ரூ.5 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு போலீஸ் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா எழும்பூரில் இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். பின்னர் அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்தார். அருங்காட்சியகத்தில் காவல் துறையின் சிறப்புகளை உணர்த்தும் வகையில் பழங்கால பொருட்கள் இடம்பெற்று உள்ளன.

மேலும் போலீசார் பயன்படுத்திய பழமையான உடைகள் முதல் ஆயுதங்கள் வரை அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. அவைகளை
மு.க.ஸ்டாலின்
பார்த்து வியந்தார்.



முன்னதாக விழாவுக்கு வந்த மு.க.ஸ்டாலினுக்கு காவல் துறையினரின் சிறப்பு அணிவகுப்பு மற்றும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News