ஆன்மிகம்
மெகா சைஸ் காலணியை ஊர்வலமாக எடுத்து வந்த பக்தர்கள்.

பழனி முருகனுக்கு மெகா சைஸ் காலணியை காணிக்கையாக வழங்கிய பக்தர்கள்

Published On 2021-11-17 07:22 GMT   |   Update On 2021-11-17 07:22 GMT
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் விதவிதமான காணிக்கைகள், நேர்த்திக்கடன்கள் செலுத்துவது வழக்கம்.
பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு மெகா சைஸ் காலணியை பக்தர்கள் காணிக்கையாக வழங்கினர்.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் விதவிதமான காணிக்கைகள், நேர்த்திக்கடன்கள் செலுத்துவது வழக்கம். திருவிழா காலங்களில் விதவிதமான காவடிகள் எடுத்து வந்தும், அலகு குத்தியும் முருகப்பெருமனை வழிபட்டுச் செல்வார்கள்.

அதன் வரிசையில் கரூரைச் சேர்ந்த 200 குடும்பத்தினர் மெகாசைஸ் காலணியை முருகனுக்கு காணிக்கையாக வழங்க கொண்டு வந்தனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், முருகப் பெருமான் தங்கள் கனவில் வந்து எதைக் கேட்டாலும் அதனை தயாரித்து காணிக்கையாக வழங்கி வருகிறோம்.

தெய்வானையின் உறவு முறை என்பதால் முருகனுக்கு இது போல பல்வேறு சீர்வரிசைகள் வழங்கியுள்ளோம். அதன்படி தற்போது மெகாசைஸ் காலணியை தயாரித்து அதனை தலையில் சுமந்தவாறு பெண்கள் கும்மியடித்து மேளதாளங்கள் முழங்க கிரி வீதியை சுற்றி வந்து மடத்தில் பூஜைகளை முடித்தபிறகு காணிக்கையாக வழங்க உள்ளோம் என்றனர்.

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் மொட்டையடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தி முருகப்பெருமானை வழிபட்டுச் சென்றனர்.
Tags:    

Similar News