சமையல்
கருப்பட்டி காபி

சர்க்கரை நோயாளிகளும் அருந்தலாம் கருப்பட்டி காபி

Published On 2022-04-21 05:17 GMT   |   Update On 2022-04-21 05:17 GMT
சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்க ஆசைப்பட்டால் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியைப் பயன்படுத்தலாம். இன்று கருப்பட்டி காபி போடுவது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கருப்பட்டி - 1/4 கப்,
காபித்தூள் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்

செய்முறை :

கருப்பட்டியை துளாக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் காபித்தூளைப் போட்டு டிகாக்‌ஷன் இறங்கும் வரை கொதிக்க விடவும்.

பின்னர் அதில் தூளாக்கிய கருப்பட்டியை போட்டு டிகாக்‌ஷன் இறங்கியதும் இறக்கி வடிகட்டவும்.

விருப்பப்பட்டால் பால் சேர்த்தும் அருந்தலாம்.

பலன்கள்: சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இவை, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். உடலுக்கு சக்தியளிக்கும். எலும்புகள், பற்களுக்கு உறுதியைத் தரும்.
Tags:    

Similar News