ஆன்மிகம்
காவடி பழனியாண்டவர்

காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடக்கம்

Published On 2020-11-13 07:17 GMT   |   Update On 2020-11-13 07:17 GMT
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் 70-ம் ஆண்டு கந்தசஷ்டி திருவிழா, 59-ம் ஆண்டு சஷ்டி உற்சவம், 23-ம் ஆண்டு லட்சார்ச்சனை பூஜை திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் 70-ம் ஆண்டு கந்தசஷ்டி திருவிழா, 59-ம் ஆண்டு சஷ்டி உற்சவம், 23-ம் ஆண்டு லட்சார்ச்சனை பூஜை திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தினசரி காலை, மாலை லட்சார்ச்சனை, காவடி பழனியாண்டவருக்கு 36 சஷ்டி பாராயணம், சோடஷ உபகார பூஜை, தீபாராதனை நடைபெறும்.

வருகிற 20-ந்தேதி காலை 6 மணிக்கு கோமாதா பூஜை, நடைதிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 7 மணிக்கு 36 சஷ்டி பாராயணம், 9 மணிக்கு கந்தசஷ்டி, சத்ரு சம்ஹார ஹோமம், 108 வலம்புரி சங்காபிஷேகம், கலசாபிஷேகம், லட்சார்ச்சனை பூர்த்தி பூஜையும், பகல் 12 மணிக்கு தீபாராதனை, தங்க கவசம் சாத்துப்படியும், மாலை 4 மணிக்கு சூரசம்ஹார லீலை, நவவீரர் விஜயம், வீரபாகு தூது, சூரசம்ஹாரம், இரவு 7 மணிக்கு மகாபிஷேகம், செந்தூர் வேலன் அலங்காரம், 108 தங்க மலர்களால் அர்ச்சனை, மகா தீபாரதனை, திருப்புகழ் பஜனை நடைபெறுகிறது. 21-ந்தேதி காலை 11 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசை வருதல், பகல் 12 மணிக்கு திருக்கல்யாணம், உற்சவமூர்த்தி, மகா தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News