உலகம்
கொரோனா வைரஸ்

பிரான்சில் ஒரே நாளில் 59 ஆயிரம் பேருக்கு கொரோனா

Published On 2021-12-08 21:46 GMT   |   Update On 2021-12-08 21:46 GMT
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6 லட்சத்து 87 ஆயிரத்து 498 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பாரீஸ்:

பிரான்ஸ் பொது சுகாதார முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

நாட்டில் 24 மணி நேரத்தில் 59 ஆயிரத்து 19 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு ஒரே நாளில் அதிக பாதிப்பு ஆகும்.

24 மணி நேரத்தில் 168 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது 12 ஆயிரத்து 714 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



24 மணி நேரத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6 லட்சத்து 87 ஆயிரத்து 498 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மேலும் 70 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News