தொழில்நுட்பம்

மலிவு விலையில் இணைய வசதி வழங்க தயாராகும் அமேசான்

Published On 2019-04-07 10:40 GMT   |   Update On 2019-04-07 10:40 GMT
அமேசான் நிறுவனம் செயற்கைகோள் உதவியுடன் மலிவு விலையில் இணைய வசதியை வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Amazon



அமேசான் நிறுவனம் பிராஜெக்ட் குய்பர் என்ற திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உலகம் முழுக்க அதிவேக இணைய வசதியை வழங்க அமேசான் முடிவு செய்துள்ளது.

அதிவேக இணைய வசதியை வழங்க அமேசான் 3000 செயற்கைக்கோள்களை அமேசான் பயன்படுத்த இருக்கிறது. இவற்றின் உதவியுடன் உலகம் முழுக்க இடையூறின்றி இணைய சேவையை வழங்க முடியும் என அமேசான் நினைக்கிறது. 3000 செயற்கைக்கோள் மூலம் உலக மக்கள் தொகையின் 95 சதவிகிதம் பேருக்கு இணைய வசதியை வழங்க முடியும் என கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை அமேசான் ஆண்ட்ராய்டு போலீஸ் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறது. புதிய திட்டத்தின் மூலம் உலகம் முழுக்க செயற்கைக்கோள்களை நிறுவ அமேசான் திட்டமிட்டுள்ளது. குய்பர் நீண்ட கால திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் திட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கும் அதிகமாக இணைய வசதியை வழங்க முடியும்.



அனைவருக்கும் இணைய வசதியை வழங்கும் நோக்கம் கொண்ட மற்ற பிராண்டுகளுடன் கைகோர்க்கவும் அமேசான் திட்டமிட்டுள்ளது. அமேசான் நிறுவனம் மொத்தம் 3236 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக மக்கள் தொகையில் 95 சதவிகிதம் பேருக்கு இணைய வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இத்திட்டத்தை வெற்றியடைய வைக்க அமேசான் நிறுவனம் பெரும் தொகையை முதலீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் அமேசான் நிறுவனம் துவக்கத்தில் இணைய கட்டணத்தை குறைவாக நிர்ணயம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

இதேபோன்று ரிலையன்ஸ் ஜியோவும் தனது ஜிகாஃபைபர் திட்டத்தை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இவை நாடு முழுக்க அதிவேக பிராட்பேண்ட் இணைய வசதியை மலிவு விலையில் வழங்க இருக்கிறது. 
Tags:    

Similar News