செய்திகள்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்களை போலீசார் சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பு பெற திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்

Published On 2021-09-20 12:08 GMT   |   Update On 2021-09-20 12:34 GMT
திருப்பூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.
திருப்பூர் :

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பான மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட நிர்வாகம் பெற்று வருகிறது. இதற்கான சிறப்பு முகாம்களும் நடைபெற்றது.

இந்தநிலையில் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டும் இலவச வீட்டு மனை பட்டா கேட்டும் அதிகாலை முதலே திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்களுடன் நீண்ட வரிசையில் நின்று மனு கொடுத்தனர்.

மேலும் குடிநீர் வசதி, சாக்கடை, கால்வாய் வசதி போன்ற வசதிகள் கேட்டும் பொதுமக்கள் மனு கொடுக்க வந்ததால் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
Tags:    

Similar News