லைஃப்ஸ்டைல்
இறால் பிரைடு ரைஸ்

சுலபமாக செய்யலாம் இறால் பிரைடு ரைஸ்

Published On 2021-04-07 09:31 GMT   |   Update On 2021-04-07 09:31 GMT
குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இறாலை வைத்து சுலபமான முறையில் இறால் பிரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

இறால் - கால் கிலோ
பாசுமதி அரிசி - 4 கப்
வெங்காயம் - 4
முட்டை - 4
பூண்டு - 1 டீஸ்பூன்
கேரட் - 1
வெங்காயத்தாள் - சிறிதளவு
மீன் சாஸ் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - 1 கட்டு

செய்முறை:


கொத்தமல்லி, கேரட், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

முட்டையை அடித்து கலக்கி வைத்துக்கொள்ளவும்.

பாசுமதி அரிசியை உதிரியாக வேகவைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இறாலை கொட்டி பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். அதனுடன் பூண்டை சேர்த்துக்கொள்ளவும்.

அடுத்து கேரட்டையும் சேர்த்து வதக்கவும்.

முட்டையையும் ஊற்றி கட்டி பிடிக்காமல் கிளறி விடவும்.

நன்கு வெந்ததும் வேக வைத்த சாதத்தை கொட்டி கிளறவும்.

அதனுடன் சோயா சாஸ், மீன் சாஸ், மிளகுத்தூள், வெங்காயம், வெங்காய்த்தாள் போன்றவற்றை கலந்து வேகவிடவும்.

அவை வெந்து பிரைடு ரைஸ் பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

சூப்பரான இறால் பிரைடு ரைஸ் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News