தோஷ பரிகாரங்கள்
கருடாழ்வார்

திருஷ்டிகளை விரட்டும் கருடபார்வை

Published On 2022-03-04 05:32 GMT   |   Update On 2022-03-04 08:44 GMT
கருடனின் பார்வை நம் மீது பட்டாலே போதும், நாம் எடுத்த செயல்கள் எல்லாம் வெற்றிபெறும். அந்த பார்வை பட்டால் உங்களை எந்த தீய சக்திகளும், திருஷ்டிகளும், தீ வினைகளும் நெருங்காது.
வைணவத் தலங்களில் கருட கொடி அருகில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கருடனை தரிசனம் செய்த பிறகு, பெருமாளையும், தாயாரையும் தரிசிப்பதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள். ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடன் பிறந்தார். எனவே சுவாதி நட்சத்திர நாட்களில் (நாளை சுவாதி நட்சத்திர நாள்) கருடனை வழிபட்டால், கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவன் எளிதில் கிடைப்பார். குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆலயங்களில் முக்கிய திருவிழாக்கள் நடக்கும் போது மேலே கருடன் பறப்பதை பார்த்திருப்பீர்கள். அப்படி கருட தரிசனம் கிடைக்கும் போது கை கூப்பி வணங்க தேவை இல்லை. மனதுக்குள் கருடன் அருள் பெறும் மந்திரங்களை சொல்லி வழிபட்டால் போதும்.

மேலும் கருடனின் பார்வை நம் மீது பட்டாலே போதும், நாம் எடுத்த செயல்கள் எல்லாம் வெற்றிபெறும். கருடனின் பார்வைக்கு, ‘சூட்சும திருஷ்டி’ என்று பெயர். அந்த பார்வை பட்டால் உங்களை எந்த தீய சக்திகளும், திருஷ்டிகளும், தீ வினைகளும் நெருங்காது. எனவே கருடனை கண்டால் மனதை ஒருமுகப்படுத்தி தரிசனம் செய்யுங்கள். ஒவ்வொரு நாள் கருடன் தரிசனத்துக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை கருடனை வழிபட்டால், நோய்கள், பாவங்கள் மனக்குழப்பங்கள் நீங்கும்.

திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் கருடனை வழிபட்டால் பெண்களுக்கு அழகு உண்டாகும். பகை விலகும். குடும்ப சிக்கல்களுக்கு விடை கிடைக்கும்.

புதன், வியாழன் கிழமைகளில் வழிபட்டால், எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். பகைவர்கள் வைத்த சூனியம் நீங்கும்.

வெள்ளி, சனிக்கிழமைகளில் வழிபட்டால் ஆயுள் கெட்டியாகும். எந்த விஷயத்திலும் துணிச்சல் உண்டாகும். தன்னம்பிக்கை, ஆர்வம் அதிகரிப்பதால் செல்வம் பெருகும்.

புரட்டாசி மாதம் தமிழகம் முழுவதும் உள்ள வைணவத் தலங்களில் கருட சேவை நடைபெறும். அன்றைய தினம் கருட சேவை வழிபாடு செய்தால், பெருமாளின் கருணைப் பார்வை நம் மீது திரும்பும். எனவே புரட்டாசி கருட சேவைகளை தவற விடாதீர்கள்.
Tags:    

Similar News