செய்திகள்
ப.சிதம்பரம்

பொருளாதாரத்தை மீட்க அரசிடம் திட்டம் இல்லை - காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

Published On 2020-11-13 02:55 GMT   |   Update On 2020-11-13 02:55 GMT
பொருளாதாரம் தொடர்ந்து மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஆனால் அதை மீட்க மத்திய அரசிடம் திட்டம் எதுவும் இல்லை என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

கொரோனாவால் வீழ்ச்சியை சந்தித்து வரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்த நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி குறைகூறியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், கட்சியின் மற்றொரு தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் மெய்நிகர் முறையில் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது ப.சிதம்பரம் கூறுகையில், ‘பொருளாதாரம் தொடர்ந்து மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஆனால் அதை மீட்க மத்திய அரசிடம் திட்டம் எதுவும் இல்லை. அதேநேரம் பொருளாதாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதிலும், பொருளாதாரம் தொடர்பாக தலைப்புச்செய்திகளில் இடம்பிடிப்பதிலும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது’ என்று குற்றம் சாட்டினார்.

ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, ‘பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசிடம் திட்டம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இதனால் 2020-21-ம் ஆண்டு ஒரு வீணாக்கப்பட்ட வருடமாகவே இருக்கும். முந்தைய ஆண்டைவிட பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாகவே இருக்கும்’ என்று தெரிவித்தார்.மத்திய அரசு வெளியிடும் சலுகைகள் அனைத்தும் வெறும் அறிவிப்புகள் மட்டுமே என்றும், இதுபோன்று மினி பட்ஜெட் அறிவிப்பது இது 2-வது முறையாகும் எனவும் கூறிய ஜெய்ராம் ரமேஷ், இந்த அறிவிப்புகளுக்கான பலன் குறைந்தபட்சம் இந்த ஆண்டாவது ஏற்படாது எனவும் கூறினார்.



 
Tags:    

Similar News