செய்திகள்
கண்டெய்னர் லாரிகள்

துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் ‘ஸ்டிரைக்’

Published On 2019-09-16 06:20 GMT   |   Update On 2019-09-16 06:20 GMT
சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரி வேலைநிறுத்தம் காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர்:

கண்டெய்னர் லாரியில் அதிக எடை கொண்ட சரக்கு பெட்டகம் ஏற்ற மாட்டோம். ஒரு கண்டெய்னர் லாரியில் ஒரு சரக்கு பெட்டகம் மட்டுமே ஏற்றுவோம். அதற்கு வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்கள் சென்னை, எண்ணூர் துறைமுக தலைவரிடமும், சரக்கு கையாளும் சரக்கு பெட்டக நிறுவனத்திடமும் கோரிக்கை அளித்தனர்

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேச்சுவார்த்தை நடத்த அழைக்கவில்லை. இதையடுத்து 12 சங்கங்களை சேர்ந்த கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் சென்னை, எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் 10,000 கண்டெய்னர் லாரிகள் ஓடவில்லை. திருவொற்றியூர், காசிமேடு, எண்ணூர் விரைவு சாலை, மணலி விரைவுச் சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டு உள்ளன. கண்டெய்னர் லாரி வேலைநிறுத்தம் காரணமாக துறைமுகங்களில் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News