செய்திகள்
பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு ஏற்பட்டுள்ள அபாயக்குழியை படத்தில் காணலாம்.

பல்லடத்தில் மழையால் ஏற்பட்ட அபாய குழிகளை சீரமைக்க கோரிக்கை

Published On 2021-11-21 10:51 GMT   |   Update On 2021-11-21 10:51 GMT
கடந்த வாரங்களில் பெய்த மழையால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் ரோடு சேதமாகி, ஜல்லிகற்கள் பெயர்ந்து காணப்படுகிறது.
பல்லடம்:

பல்லடம் நகரானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, இந்த தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம் உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.

கடந்த வாரங்களில் பெய்த மழையால் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் ரோடு சேதமாகி, ஜல்லிகற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. பல இடங்களில் பெரிய குழிகள் ஏற்பட்டுள்ளது. 

இதனால், பெரிய அளவிலான குழிகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அவற்றில் வாகனங்களை விட்டு விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் தினமும் பல வாகன ஓட்டிகள் விபத்துகளைச் சந்திக்கும் பரிதாப நிலை உள்ளது. அதிலும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு பல இடங்களில் பெரிய குழிகள் ஏற்பட்டுள்ளது.

எனவே குழிகளை மூடி ரோடுகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News