தொழில்நுட்பம்
ஆரோக்யசேது

டவுன்லோட்களில் புதிய மைல்கல் எட்டிய ஆரோக்யசேது

Published On 2020-04-28 05:56 GMT   |   Update On 2020-04-28 05:56 GMT
கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய விவரங்களை வழங்கும் மத்திய அரசின் ஆரோக்யசேது செயலி டவுன்லோட்களில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது.



கொரோனா தொற்று தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று பரவல் இடங்களை கண்டறிய ஏதுவாக மத்திய அரசு சார்பில் ஆரோக்கியசேது எனும் செயலி உருவாக்கப்பட்டு சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்தி மக்கள் தங்கள் பகுதியில் கொரோனா தொற்று உள்ள நபர்கள், அருகில் கொரோனா தொற்று உள்ள இடங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

இந்த செயலி ப்ளூடூத் மற்றும் ஜி.பி.எஸ். மூலம் உருவாக்கப்பட்ட சமூக வரைபடம் கொண்டு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டவருடன் மக்கள் தொடர்பு கொள்கிறார்களா என்பதை கண்டறியும். ஆரோக்கிய சேது செயலி வெளியானது முதல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. செயலி வெளியான 13 நாட்களில் 5 கோடி டவுன்லோடுகளை கடந்திருந்த நிலையில், தற்சமயம் டவுன்லோடுகளின் எண்ணிக்கை 7.5 கோடியாக அதிகரித்துள்ளது.



ஏப்ரல் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ஆரோக்யசேது செயலி அன்று முதல் அதிகளவு டவுன்லோட்களை கடந்து வருகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் இலவசமாக கிடைக்கும் ஆரோக்யசேது செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இதன் டவுன்லோட்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. 

மேலும் இந்த செயலியை பொதுமக்கள் டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்துடன் செயலியை மக்களிடம் கொண்டு சேர்க்க தேவையான அளவு விளம்பரம் செய்யவும் அரசு சார்பில் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

மத்திய அரசின் ஆரோக்யசேது செயலியானது பயனர்களுக்கு அருகில் கொரோனா தொற்று உள்ள இடங்கள் மற்றும் ஹாட்ஸ்பாட் பகுதிக்கான எச்சரிக்கையினை உடனுக்குடன் தெரிவிக்கும். 
Tags:    

Similar News