உள்ளூர் செய்திகள்
விழாவில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கிய போது எடுத்தபடம்.

தமிழகத்தில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை- அமைச்சர் சி.வி.கணேசன் பேச்சு

Published On 2022-05-07 09:43 GMT   |   Update On 2022-05-07 09:43 GMT
இதுவரையில் 57 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 72 ஆயிரம் இளைஞா்களுக்கு தனியாா் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது
ஊட்டி:
நீலகிரி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாமின் முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் வீரராகவராவ், நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் ஆகியோா் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் அமைச்சா் சி.வி. கணேசன் பேசியதாவது:-

ஊட்டியில் வருகிற  12-ந் தேதி நடைபெறவுள்ள தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் சுமாா் 200 நிறுவனங்கள் வரை கலந்து கொள்ள உள்ளன. இதன் மூலம் சுமாா் 15,000 பணியிடங்களுக்கு ஆட்களை தோ்வு செய்ய உள்ளனா். இந்த முகாமினை வெற்றிகரமாக நடத்தி முடிக்க அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

படித்து முடித்த இளைஞா்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் என்ற எண்ணத்தில் இதுவரையில் 57 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 72 ஆயிரம் இளைஞா்களுக்கு தனியாா் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்டு மாதத்துக்குள் 1 லட்சம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடா்ந்து ஊட்டி நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று ஒரு வருடம் ஆன நிலையில் ஊட்டி  நகர செயலாளர் எஸ்.ஜார்ஜ்  தலைமையில் 1000-க்கும் மேற்பட்டோர்களுக்கு ஊட்டி நொண்டி மேடு பகுதியில் அமைச்சர்  சி.வெ.கணேசன் மற்றும்  நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக்  கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். 

விழாவிற்கான ஏற்பாடுகளை ஊட்டி நகரமன்ற உறுப்பினர் ஜோ.செல்வராஜ் ஏற்பாடு செய்தார். 

இதில் மாவட்ட துணை செயலாளர் ஜே.ரவிக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.இளங்கோவன், செந்தில் ரங்கராஜ், கே.எம்.ராஜு, கே.ஏ. முஸ்தபா, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, உதகை நகர மன்றத் தலைவர் வாணீஸ்வரி,  தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இதில் நகர அவைத்தலைவர் ச.ஜெய கோபி,  கார்டன் கிருஷ்ணன்,  மஞ்சு குமார்,  சுரேஷ், காந்தல் சம்பத்,  ஸ்டீபன்,  தியாகு, சீனிவாசன், கார்த்திக், ரகுபதி, அப்பாஸ், வின்சென்ட் ரவிக்குமார், வினோத்குமார், ஸ்டான்லி், நீல் ஆம்ஸ்ட்ராங்,  நாகராஜ், மகளிர் அணியைச் சார்ந்த நிர்மலா மேரி, ஜெயராணி, மாகி, சரோஜா, ரெஜினா மேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News