உள்ளூர் செய்திகள்
பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரம்

Published On 2021-12-09 02:47 GMT   |   Update On 2021-12-09 03:32 GMT
பிபின் ராவத் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியின் டிரான்ஸ்பார்மர்கள் செயல் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு பிபின் ராவத்துடன் 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் எம்.ஐ.17 வி 5 (MI17 V 5) விபத்துக்குள்ளானது. இதில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு சற்றுமுன் இந்த துயர சம்பவம் நடைபெற்றது. எரிந்த நிலையில் மீட்டகப்பட்ட உடல்கள் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கண்டயறிப்பட்டுள்ளன. பிபின் ராவத் உடல் இன்று டெல்லிக்கு எடுத்துக் செல்லப்படுகிறது.

இதற்கிடையே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான எப்படி? என கண்டறிய ஹெலிகாப்டரில் உள்ள கருப்புப் பெட்டி அவசியம். இந்த கருப்புப் பெட்டியில் கமாண்டர் பேசிய உரையாடல் பதிவாகியிருக்கும். இதை நிபுணர்கள் தேடிவருகின்றன. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் சுற்றளவில் தேடினர்.

தற்போது கருப்புப் பெட்டியின் டிரான்ஸ்பார்மர்கள் செயல் இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ள நிபுணர்கள், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கருப்புப் பெட்டியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News